Categories
மாநில செய்திகள்

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்- பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் தங்கள் சொத்து விவரத்தை ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ள எதுவாக சொத்து விவர அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரயுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காணொளியில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள முகவரி அனுப்பப்பட்டு சொத்து விவர அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவர்களுக்கு சொந்த விவர அட்டை நேரடியாக அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொத்துக்களை காண்பித்து கடன் உதவி, நிதி சலுகை ஆகியவற்றை பெற முடியும் என்றும். அடுத்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 6 லட்சத்து 62 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |