பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம் என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர்.
இத்தகறாரில் பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் . இந்நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டில் மகள்கள் மட்டும் இருந்த போது குடிநீர் குழாயை உடைத்து ,மின் இணைப்பை துண்டித்தது மட்டுமல்லாமல் வீட்டிற்கு முன்னால் குழி தோண்டியும் போட்டுள்ளார். இதுகுறித்து பிச்சைக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிச்சைக்கன்னு குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததோடு பெட்ரோல்லை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனைப்பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை காப்பாற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.