மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசியல்வாதி பாபா பாரதி. இவரது மகன் மனிஷ். இருவருக்கும் சில தினங்களாகவே சொத்து குறித்த தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், காலை துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்த மனிஷ், பாபா பாரதியிடம் சொத்து விவகாரம் குறித்து பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கம்போல் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த பாபா பாரதி தனது மகன் மனிஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பாபா பாரதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.