முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு தமிழர்கள் விடுதலை பற்றி தமிழக ஆளுநர் விரைந்து முடிவு செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் விடுதலை பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எம்டிஎம்ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என்று சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தை காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற ஆறு தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.