முதியவரை தாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது பாட்டியான புனிதா என்பவரிடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். இதனை அங்கிருந்த புனிதாவின் உறவினரான மாணிக்கம் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த விக்னேஷ் மாணிக்கத்தை விக்னேஷை மரக்கட்டையால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.