Categories
மாநில செய்திகள்

சொந்தக்காசு போட்டு….. தங்கள் வகுப்பறைக்கு பெயிண்ட் அடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்…. வைரலாகும் சம்பவம்…..!!!

தனது சொந்த காசில் வகுப்பறைக்கு மாணவர்கள் பெயிண்ட் அடித்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, மேசைகளை உடைப்பது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெரும் கண்டனத்தை எழுப்பியிருந்தது நிலையில் திருச்சி லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாகர் பள்ளி ஆசிரியர்களை அழைத்து விரைவில் பொதுத்தேர்வு வர உள்ளதால் வேறு பள்ளி மாணவர்கள் நம் பள்ளிக்கு தேர்வு எழுத வருவார்கள் எனவே வகுப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் சுவற்றில் உள்ள கிறுக்கல்களை முடிந்தவரை அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாணவர்களை வைத்து மேற்கொண்டுள்ளார். இதனை அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு இ  பிரிவில் பயிலும் மாணவர்கள் சிலர் இந்த பணியை மேற்கொண்டு திருப்தி அடையாத காரணத்தினால், கையிலிருந்த பணத்தை சேர்த்து தாங்கள் பயின்ற பள்ளி வகுப்பறைக்கு பெயிண்ட்  அடித்துள்ளனர்.

வேலைக்கு ஆள் வைக்காமல் அவர்களே இறங்கி அடித்துள்ளனர். இதனை ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றதுடன் அரசு பள்ளி மாணவர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தையும் மாற்றியுள்ளது.

Categories

Tech |