தனுஷின் வாழ்க்கை குறித்து அவரின் அக்காக்கள் கவலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதனைகேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தனுஷும் மனைவி ஐஸ்வர்யா இதுபற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷுடன் வாழ ஒப்புக்கொண்டாலும் தனுஷ் நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என கூறுவதாக தகவல் வெளியாகின்றது.
தனுஷுக்கு உடன் பிறந்த இரண்டு அக்காக்கள் உள்ளார்கள் தனுஷின் வாழ்க்கை குறித்து அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். இவர்கள் இருவருமே மருத்துவராக பணிபுரிகின்றனர். இந்நிலையில் இவர்களின் இரண்டு அக்காக்களிடம் நண்பர்கள், உறவினர்கள், பணி செய்யும் இடத்தில் உள்ளவர்கள் என அனைவரும் இவர்கள் இருவரும் சேர்வார்களா இல்லை இப்படியே இருந்து விடுவார்களா? என்று கேள்வி கேட்கின்றனர். இதற்கு விடை கூற முடியாமல் தவிக்கின்றனர். தனுஷிடம் கேள்வி கேட்டாலும் அவர் மழுப்பி விட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேறிவிடுகிறாராம். இதனால் கேள்வி கேட்கும் எவருக்கும் விடை சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர் தனுஷின் அக்காக்கள்.