மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாயிக்(29 ). இவர் எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பகுதியில் வெல்டிங் மற்றும் ஃபேபிரிகேஷன் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹெலிகாப்டர் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் நீண்ட வருடங்களாக சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்து அதன் தயாரிப்பு வழிமுறையை மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்கு தயாராக இருந்தார். அதன்படி தற்போது ‘முன்னா ஹெலிகாப்ட்டர்” என்ற சிறிய அளவிலான ஹெலிகாப்டரை இவர் வடிவமைத்துள்ளார்.
இதனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சோதனை நடத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் ரோட்டார் பிளேடு சுற்றிய வேகத்தில் உடைந்து முன்புறம் அமர்ந்திருந்த அவருடைய தலையை வெட்டியதனால் சாயிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக இவரது முயற்சி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவருடைய நண்பரின் கண் முன்னே சாயிக் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://twitter.com/i/status/1426150456192081924