Categories
மாநில செய்திகள்

சொந்தமா வீடு, கார் இல்ல…. சொத்துக்கள் வாங்கி குவிக்கல…. சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்…!!!

பண மோசடி, ஆபாசபேச்சு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆபாச யுடியூபர் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எங்கள் யூடியூப் சேனலை முடக்கியுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன். அவர் பணமோசடி எதையும் செய்யவில்லை, சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |