Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் இறந்த காதலி….. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சேவகானப்பள்ளி பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது சொந்த ஊரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அந்த பெண் உயிரிழந்தார்.

இதனை அறிந்த விக்னேஷ் மன உளைச்சலில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |