Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற தாய்…. சிறுமிக்கு நடந்த திருமணம்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் நடராஜன் சிறுமியை அழைத்து வந்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |