Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரில் தனியார் நிறுவன ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் 220 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |