Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற தலைமையாசிரியர்…. ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

மர்ம நபர்கள் தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு முன்பு நின்ற ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் ஜெயப்பிரகாஷ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீஜா(52) என்ற மனைவி உள்ளார். இவர் வெட்டுகாட்டுவலசுவில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ஆம் தேதி ஜெயபிரகாஷின் குடும்பத்தினர் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை ஜெயப்பிரகாஷின் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் மர்ம நபர்கள் சமையலறையில் இருந்த சிலிண்டரை திறந்து வீட்டிற்கு வெளியே இருந்த ஸ்கூட்டரை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனையடுத்து ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |