Categories
மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நபர்…. விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பல்லாவரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தீபக் பால்(34) என்பவர் வேலை வேலை பார்த்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கவுகாத்திக்கு செல்ல விமானத்தில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் இருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைகாக அனுப்பி வைத்த பிறகு குணமடைந்தார். அதன் பிறகு நேற்று அதிகாலை தனது சொந்த ஊருக்குச் செல்ல மீண்டும் விமான நிலையம் வந்தார். அப்போது அவர் உடல் உபாதை கழிப்பதற்காக கழிவறை சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து கழிவறை அருகில் வந்த தொழிலாளிகள் தீபக் இறந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் விமான நிலைய விரைந்து வந்து தீபக் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |