மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய தட்சண்யா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் கோபி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த இரும்பு குழாயை தொட்டுள்ளார்.
அந்த இரும்பு குழாய் மீது மேலே சென்ற மின்கம்பி உரசி கொண்டிருந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.