விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பயணிகளுடைய வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன் பதிவு செய்து தங்களுக்கு ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பவும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.