Categories
தேசிய செய்திகள்

சொந்த ஊர் செல்வதற்கு ரயிலில் பயணித்தார்…. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…!!!

சொந்த ஊர் செல்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங்க் கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இந்து ஊருக்கு ரயிலில் செல்வதற்கும், அங்குள்ள மக்கள் மற்றும் பள்ளிக்கூட நண்பர்களை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இன்று கான்பூருக்கு ரயில் மூலம் செல்கிறார். அங்கு சென்று தனது பள்ளிக்கால நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக செல்கிறார். குடியரசுத் தலைவர் தனது சிறுவயது முதல் நாட்டின் உயர்ந்த அரசியல் சாசனம் பதவிக்கு வந்தது வரை 70 ஆண்டு கால நினைவு பயணம் பயணிக்கிறார்.

ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜூன் 28-ஆம் தேதி கான்பூர் மத்திய ரயில்வே நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் பயணிக்கும் அவர் 2 நாள் பயணமாக லக்னோ செல்கிறார். ஜூன் 29ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் மீண்டும் புது டெல்லி திரும்புகிறார். குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர்கள் இதுவரை ரயிலில் பயணம் செய்யவில்லை. 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.

Categories

Tech |