மீன் விற்பனை முடித்துவிட்டு திரும்பி சென்ற போது மினி வேன் கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு கடலில் பிடிக்கப்படும் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு சென்று விற்பனை செய்துவிட்டு பின்னர் அதே சரக்கு வாகனத்தில் திரும்பி சொந்த ஊருக்கு வருவது வழக்கம் . அதேபோல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துl விட்டு மினி வேனில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிவகங்கை மாவட்டம் , ஒக்கூர் என்ற இடத்தில் அவர்கள் வந்த மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் வாகன ஓட்டுனர் மற்றும் பயணம் செய்த 8 பெண்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மினி வேனில் சிக்கினவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.