தமிழக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கட்சியை அவரே விமர்சித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நேற்று நியமிக்கப்பட்டனர். இதை விமர்சித்து சிவகங்கை தொகுதியில் எம்பி கார்த்தி சிதம்பரம், “இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனும் இல்லை. 32 துணைத்தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது” என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.