சென்னையில் ப்ளூ சட்டை என்ற படவிழா நடைபெற்றது. இந்த குறும்படத்தில் படங்களை பற்றி கடுமையாக விமர்சிப்பவரின் நாக்கை அறுப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பயில்வான் ரங்கநாதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் கடுமையாக விமர்சிப்பது தவறு என்றாலும் நாக்கை அறுப்பது போன்ற ஒரு காட்சி எப்படி இடம் பெறலாம் என்று பயில்வான் கேட்டார். இதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். அதன் பிறகு இயக்குனராக ஆவதற்கு 5 வருடங்கள் கஷ்டப்பட்டேன். அந்த 15 வருடங்களில் என்னால் சொந்த ஊருக்கு கூட போக முடியவில்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை இயக்கி அதை ரிலீஸ் செய்யும் நேரத்தில் ஒருவர் படத்தை கடுமையாக விமர்சித்தால் அந்த இயக்குனரின் மனம் என்ன பாடுபடும் என்பதை அவர்கள் உணர வேண்டாமா? என்றார் பேரரசு. அதன் பிறகு படத்தை விமர்சிக்க வேண்டும் என்றால், சொந்த காசில் படம் பார்த்து விமர்சிக்க வேண்டும் தவிர ஓசியில் பார்த்து விமர்சிக்க கூடாது என்றும் கூறினார். மேலும் விழாவில் பிரச்சனை ஏற்படுவதை உணர்ந்த ஜாக்குவார் தங்கம் மேடையில் இருந்து இறங்கி வெளி நடப்பு செய்ததால் படவிழா ஓரளவு சுமூகமாக முடிவடைந்தது.