Categories
தேசிய செய்திகள்

சொந்த காசுல சூனியம் வைக்கிறதுனா அது இதுதானோ… தொழிலாளியை சுட போய்… தன் மகனையே துப்பாக்கியால் சுட்ட தந்தை….!!

கர்நாடகாவில் சம்பளம் கேட்டு தவறாக தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதில் குறி தவறி அவருடைய மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. கர்நாடக பாண்டேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பிரபு. இவர் பார்சல் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ராஜேஷ் பிரபு தன்னிடம் வேலை பார்த்த டிரைவர் மற்றும் கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை அங்கு வந்த ஒரு டிரைவரும் கிளீனரும் ராஜேஷ் பிரபுவிடம் சம்பளத்தை கேட்டு வாதாடி உள்ளனர். இதனால் கோபமுற்ற ராஜேஷ் தனது துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் தோட்டா குறி தவறி அவருடைய மகனின் தலையிலேயே பாய்ந்தது இதில் படுகாயமடைந்த அவருடைய மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |