சிறு தொழில் செய்ய விரும்புவோருக்கான கடன் பெறும் திட்டத்தை குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனை எங்கு பெறுவது, என்று குழப்ப நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கான கடன் பெறும் திட்டத்தை குறித்து இங்கு பார்க்கலாம். அவ்வாறு சிறு தொழில் செய்ய விரும்புவோருக்கு வெறும் 59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த கடன் தொடர்பான பணிகளுக்கு சுமார் 12 நாட்கள் வரை ஆகும். மேலும் இந்த கடனுக்கும் 8.50% வட்டி விதிக்கப்படுகிறது எனவும் ரூ.1 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், சிறு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ரூ.10 லட்சம் வரை கடன் தொகையானது வழங்கப்படுகிறது. SMILE (SIDBI Make In India Soft Loan Fund For MSMEs) திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டமானது சிட்பி வங்கியால் (Small Industries Development Bank of India) நிர்வகிக்கப்படுகிறது. அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்தக் கடன்களுக்கு 8.36% முதல் வட்டி விதிக்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு CGTMSE (Credit Guarantee Fund Trust for Micro And Small Enterprises) திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை மூலதனக் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு எந்தப் பிணையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.