Categories
உலக செய்திகள்

சொந்த நாடு திரும்பியுள்ள 66 ஆயிரம் உக்ரேனியர்கள்….பாதுகாப்புத்துறைஅமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட வெளிநாடுகளிலிருந்து 66 ஆயிரம் உக்ரேனிய ஆண்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 10 நாளாக தொடர்ந்து வந்த நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேலும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போர் நிறுத்தமானது உக்ரைனின் இரண்டு நகரங்களில், மீட்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனுடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டதால், இரு நகரங்களான வோல்னோவாகா, மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யா நேற்று தெரிவித்துள்ளது. இதனால் இரு  நகரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் வெளிநாடுகளிலிருந்து யார் வேண்டுமானாலும் உக்ரைன் படையில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிடலாம் என அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் உக்ரைனில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரைவில் உக்ரைன் நாட்டிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 66,224 ஆண்கள் தங்கள் சொந்த நாடு திரும்பியுள்ளதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ஒலிக்ஸ்சி ரிஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |