Categories
உலக செய்திகள்

“சொந்த நாட்டிற்குத்” திரும்பிய படைகள்…. கலவர பூமி என்னாச்சுன்னு தெரியுமா…?

கஜகஸ்தானில் எரிபொருள் விலையின் உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு அனுப்பப்பட்டிருந்த ரஷ்ய படைகள் அனைத்தும் தற்போது தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள்.

கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் புத்தாண்டையொட்டி எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த போராட்டம் சில பகுதிகளில் கலவரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபரான காசிம் ரஷ்யப் படைகளின் உதவியை நாடியுள்ளார். அதன்படியே ரஷ்ய நாட்டுப் படைகள் கடந்த 5 ஆம் தேதி கஜகஸ்தானிற்கு வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள்.

Categories

Tech |