Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே செல்ல தடை விதித்த நாடு… மீறினால் கடும் தண்டனை… இன்றுமுதல் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை…!!

இந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாதொற்றின் 2ஆம் அலை உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை ஆஸ்திரேலியா அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது.

ஆகையால் இந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் வேறு நாட்டு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிவருகின்றனர். இதனைதொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய வீரர்களும் வேறு நாட்டின் வழியாக சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பரவும் உருமாறிய வைரஸ் ஆஸ்திரேலியாவில் பரவக்கூடாது என இந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சொந்த நாட்டிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை மீறி வேறு நாட்டு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 66,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 9000 ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் அவர்களில் 600 பேருக்கு கொரோனா தொற்று பதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |