கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் குமார் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை திருட தொடங்கியுள்ளார். இந்த பணத்துக்கான கணக்கு ஆவணங்கள் இருவரும் சேர்ந்து போலியாக தயாரித்து நிறுவனத்தில் வைத்தனர்.
இந்நிலையில் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வரிகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு நிறுவனத்திற்கு சென்று ஜீஷா ஆய்வு செய்தார். அப்போது வரி செலுத்தாமல் போலியான ரசிதுகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிப்பது தெரியவந்தது. இது குறித்து ரஞ்சித் குமாரிடம் கேட்டபோது சரியாக பதில் அளிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனையடுத்து ரஞ்சித் குமார், கலைச்செல்வி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜிஷா புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், இருவரும் சேர்ந்து ரூ.4.5 கோடி வரையில் திருடி உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் பிறகு தலைமறைவான ரஞ்சித் குமார், கலைச்செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட பணத்தில் கட்டப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வீடு, வாங்கப்பட்ட சொத்துக்களையும் போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர்.