Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு…. “மீண்டும்” தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை குடும்பத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு பொதுமக்கள் அவரது வீட்டிற்கு பூட்டு போட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு சொந்த மகளையே பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ராஜா சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |