Categories
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் தோல்வியடைந்த அரேமா அணி “… கொந்தளித்த ரசிகர்கள்… வன்முறையில் 174 பேர் பலி…!!!!!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் கடுமையாக கோபம் அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆடுகளத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது ரசிகர்கள் பாட்டில் மற்றும் பிற பொருட்களை வீசி எரிந்துள்ளனர்.

இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆடுகளத்துக்குள் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வன்முறைகளை விரட்டி அடிக்கும் மைதானத்திற்குள் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எரிந்துள்ளனர். இதில் மைதானம் முழுவதும் பதற்றம் நிலவியுள்ளது இதிலிருந்து தப்பிப்பதற்காக பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை விட்டு வெளியேறும் பாதையை நோக்கி ஓடியுள்ளனர்.

இதில் ஏராளமானோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டு நசுங்கி உள்ளனர்.இதில் பல பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இப்படி இந்த துயர சம்பவத்தில் இதுவரை 174 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதேபோல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதற்கிடையே கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்தோனேசியா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இந்த சோகத்திற்கு நான் மிகவும் வருந்துகின்றேன். இது இந்த நாட்டின் கடைசி கால்பந்து சோகம் என நான் நம்புகிறேன் எதிர்காலத்தில் இது போன்ற மற்றொரு மனித சோகம் நடைபெற வேண்டாம். மேலும் இந்தோனேசிய தேசத்தின் விளையாட்டு திறன் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் உணர்வை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் அடுத்த வருடம் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பிபா யூ 20 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு இந்த கால்பந்து போட்டி துயர சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |