சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் உதயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மசாஜ், பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
Categories