இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு 6.65 சதவீதம் வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகிறது.
18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கடன் பெறலாம். இதில் செயலாக்க கட்டணம் குறைவு. மறைமுகக் கட்டணங்கள் இல்லை. கடனை 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். மேலும் பெண் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் இன்னும் குறைவாகவும் கூடுதல் செலவு சலுகைகளுடனும் கிடைக்கிறது. இந்த வீட்டுக் கடன் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்டுள்ளது.