Categories
மாநில செய்திகள்

“சொந்த வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் கூடவா வித்தியாசம் தெரியல”… குடிபோதையில் முன்னாள் எம்பி செஞ்ச காரியம்…!!!!

குடிபோதையில் மற்றொருவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்பி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் குன்னூர் நகர மன்றத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி நாளில் அவர் குடிபோதையில் இரவு 10 மணி அளவில் ஒட்டுப்பட்டரை அருகே முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாணமாக புகுந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் அவரை பார்த்து கத்தி கூச்சல் போட்டுள்ளனர். மேலும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களுக்கும் கோபால கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை கோபி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நுழைந்தது குறித்து கோபி குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |