Categories
சினிமா

சொன்னத செய்யமாட்டீங்ளா…..சோனுசூட்டுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் …!!

ஹோட்டலை குடியிருப்பாக மாற்ற கோரி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் சோனு சூட்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சோனு சூட் மும்பையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் 6 மாடி கொண்ட குடியிருப்பை ஹோட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கட்டடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனு சூட் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் உறுதியளித்தபடி ஹோட்டலை குடியிருப்புப் பகுதியாக மாற்றும் பணியை நீங்கள் தொடங்கவில்லை என குறிப்பிட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Categories

Tech |