Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னபடி செய்துவிட்டோம்…!ஆம்! பலரின் கனவு நனவானது….. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.  மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது ட்விட்டர் பதிவில், மெரினா வந்த தங்கை வைஷ்ணவி “Dream Come True” என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |