Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… விதிமுறையை பின்பற்றாத பேருந்து… அபராதம் வித்த அதிகாரிகள்…!!

அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயம் முககவசத்தை அணிந்து சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகளை  மீறும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பேருந்து நிறுத்தத்தில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், அதிக அளவில் பயணிகளை ஏற்றி கொண்டும் சென்றதை அதிகாரிகள்  பார்த்துள்ளனர். இதனால் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |