Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு… பெருமாளுக்கு சிறப்பு பூஜை … ஏராளமான பக்தர்கள் சரிசனம் …!!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பகல் 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் காப்பு கட்டப்பட்டு 10-வது நாளான நேற்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. பின்னர் பெருமாள் மோகினி அவதாரத்தில் தென்னைமர வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் இன்று காலை 8 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டு ஸ்ரீதேவி மூதேவி தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Categories

Tech |