சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அறியகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 13 -ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலை 5 மணிக்கு திருவேங்கடமுடையான் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது. அதன்பின் காலை 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மக்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.