விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளம்பி கிராமத்தில் இருக்கும் ஏரியை ஒட்டி 5 ஏக்கர் 5 சென்ட் பரப்பளவிலான நிலத்தை விவசாயிகள் ஆக்கிரமித்து அதில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அதிகாரிகள் பலமுறை தெரிவித்தும் விவசாயிகள் அதனை கேட்கவில்லை.
இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவின் படி கலவை தாசில்தார் ஷமீம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியோடு நெல் நாற்றங்கால் மற்றும் நெற்பயிரை அழித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.