Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சொல்லுறத உடனே செய்யுங்க…! ”பாஜகவுக்கு கேப்டன் அட்வைஸ்”… பரபரப்பு அறிக்கை …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்ததை அடுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. லட்சக்கணக்கான விவசாயிகள் ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடைபெறுகின்றது.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது விவசாயிகளின் பூமி. அவர்களின் குறைகளைத் தீர்க்காமல் இந்தியா வல்லரசாக முடியாது. வேளாண் சட்ட விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Categories

Tech |