Categories
தேசிய செய்திகள்

சோகத்தில் முடிந்த வெட்டிங் போட்டோசூட்….! ஆற்றில் கால் தவறி விழுந்த ஜோடி…. பலியான மாப்பிளை…..!!!!

திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் நடத்திய போது பாறையிலிருந்து மணமகன் தவறி விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என்பவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஜானகி காடு அருகே குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் போட்டோ ஷூட் நடத்திய தம்பதிகள் ஒரு பாறைமீது போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் ரெஜில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் காப்பாற்றப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் குட்டி ஆற்று நீருக்கு அடியில் பல ஆழமான குழிகள் உள்ளன. இதை அறியாமல் பல சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாததால் ரெஜில் அந்த குழி ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |