3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரைகளூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் சசிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து குழந்தையின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். ஆனால் சசிகுமார் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.