Categories
தேசிய செய்திகள்

சோகம்…! இந்திய ராணுவத்தின் தாக்குதல் நாய் மரணம்… வீரர்கள் கண்ணீர்…!!!

காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராணுவ நாய் ஜூம் படுகாயம் அடைந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற இடத்தில் உள்ள டாங்பாவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திங்கள்கிழமை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில்,  ராணுவ நாய் ஜூம், 54 AFVH (அட்வான்ஸ் ஃபீல்ட் கால்நடை மருத்துவமனை) இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நாய் மரணம் அடைந்தது.

Categories

Tech |