கோவில் தெப்பக்குளத்தில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள செஞ்சேரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு வயது 44. இவர் தனது நண்பருடன் துறையூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு உள்ள காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில் அவர் குளித்து கொண்டு இருந்தார். அப்போது சாமிநாதன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.
தண்ணீரில் மூழ்கிய அவர் வெகுநேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாமிநாதனை பிணமாக மீட்டனர். இந்த புகார் குறித்து துறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.