Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோகம்… “தாய்ப்பால்  குடித்துவிட்டு தூங்கிய”…. 3 மாத குழந்தை பலி..!!

சங்ககிரி  அருகே  தாய்ப்பால்  குடித்துவிட்டு  தொட்டிலில் தூங்கிய   போது   3 மாத குழந்தை புரையேறி பலியான சம்பவம்  அப்பகுதியில்  பெரும்   சோகத்தை   ஏற்படுத்தியது. 

சேலம்  மாவட்டத்தில்  உள்ள   சங்ககிரி  அருகே  வெள்ளக்கரடு சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  கந்தசாமி  (வயது 22).  இவர் கூலித்தொழிலாளி.  இவர் அந்த  பகுதியை  சேர்ந்த சவுந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  வயது 17.  இவர்களுக்கு விதுலியா என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.   இந்த  நிலையில்  சவுந்தர்யா தன்   குழந்தைக்கு  கடந்த 15ஆம் தேதி  மாலையில்  தாய்ப்பால்  கொடுத்துவிட்டு  உடனே  குழந்தையை தொட்டிலில் போட்டு  தாலாட்டி  உள்ளார்.  மேலும்  சிறிதுநேரம்  கழித்து  குழந்தை  தூங்கி விட்டதா என்று  பார்த்துள்ளார்.

அப்போது  குழந்தை  மூக்கில் நுரையும், ரத்தமும்  வந்து  கொண்டு  இருந்த  நிலையில்,    மூச்சு பேச்சு இல்லை.  இதை  கண்டு  அதிர்ச்சி  அடைந்த  பெற்றோர் உடனே சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு  குழந்தை  விதுலியாவை  பரிசோதனை  செய்து  பார்த்த  டாக்டர் குழந்தை  ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இதையெடுத்து   பலியான  குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர்.  இது  குறித்து  சங்ககிரி  போலீசார்  வழக்குப்பதிவு  செய்து விசாரணை  மேற்கொண்டு   வருகின்றனர்.  கந்தசாமி   17 வயது  சிறுமியை திருமணம்  செய்து  கொண்டது  தொடர்பாக  அவர்  மீது போக்சோ சட்டத்தின் கீழ்   சங்ககிரி  அனைத்து  மகளிர் போலீசார்  வழக்குப்பதிவு  செய்து  விசாரணை  நடத்தி  வருவது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |