Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்…. திருமணமான ஒரு வருடத்தில்… மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மற்றும் பசு மாடு உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள உள்ளி புதூரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினி தம்பதியினர்.. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.. இவர்களுக்கு சொந்தமாக பசுமாடுகள் இருக்கிறது.. இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக பசுமாட்டை அங்குள்ள விளை நிலங்களில் விட்டுள்ளனர்.. இதனை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடிப்பதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு 7 மணிக்கு சென்றுள்ளனர்.. இரவு 7 மணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை..

இந்த நிலையில் இன்று காலை  குடும்பத்தினர்கள் மற்றும் ஊர் காரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்க்கும் போது, பசு மாடு, கணவன் ஜெயபிரகாஷ் மனைவி அஸ்வினி விளை நிலங்களுக்கு மத்தியில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

பின்னர் உறவினர்களுக்கும், திருவலம் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அஸ்வினியை பரிசோதித்த போது காலில் மின்சாரம் பாய்ந்த அடையாளம் இருக்கிறது.. ஜெயபிரகாஷ் உடலில் எந்தவித காயங்கள் இல்லை.. இருந்தபோதும் மனைவியை காப்பாற்ற முயன்ற போது ஜெயபிரகாஷ் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது..

அந்தப் பகுதியில் காவல் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்..
மேலும் அந்த பகுதியில் மின் கம்பங்களும், தரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளும் எதுவுமே இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இறந்திருப்பார்கள் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுகிறது..

அதே சமயம் அங்கு எலுமிச்சை மற்றும் நிலக்கடலை தோட்டம் பயிரிடப்பட்டுள்ளது.. குறிப்பாக உள்ளி புதூர் பகுதியில் தமிழகம் – ஆந்திரா வன பகுதியை ஒட்டி உள்ளது.. எனவே விளை நிலங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இறந்திருக்கலாமா? என்று திருவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories

Tech |