அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அடுத்த உஞ்சியவிடுதி கிராமத்தில் வசித்து வந்தவர் அ.தி.மு.க செயலாளர் சத்தியமூர்த்தி(67). இவர் சம்பவத்தன்று ஊரணிபுரத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் ரோட்டின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்தியமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவோணம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமூர்த்தியின் மறைவிற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இரங்கல் தெரிவித்தனர்.