மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் எம்எல்ஏ மகன் உட்பட 7 மாணவர்கள் பலியாகியுள்ளனர்..
மகாராஷ்டிரா மாநிலம் செல்சூரா அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகனும் மருத்துவ மாணவருமான அவிஷ்கர் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் வார்தாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்..
விபத்தில் இறந்துபோன அனைவருமே வர்தாவில் இருக்கும் சாவங்கி மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவர்.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.