பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். முதன்முதலாக 7 வயதில் பாட்டு பாட வந்த இவர் தனது 9 வயதில் முதல் ஆல்பத்தை வெளியிட்டார்.
இவரின் அண்ணனின் இசைக்குழு உடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கின்றார். இவர் பிரபலமான பிறகு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கின்றார். தான் கைது செய்யப்பட்டது குறித்து சென்ற 2017 ஆம் வருடம் வெளிப்படையாக அவர் பேசி இருந்தார். இவர் எழும்பும் தோலுமாக இருந்ததை பார்த்தவர்கள் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம், இல்லையென்றால் சட்டவிரோதமாக போதை பொருட்கள் பயன்படுத்துகின்றார் என பல பேச்சுக்கள் இருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாக கிடந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.