பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி. இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர்பீஸ், காயாங்குளம் கொச்சுண்ணி, நந்தனம், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கோழிகோட்டில் உள்ள குதுரசால் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. இவரது மரணத்திற்கு ரசிகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.