மணிப்பூரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், 20 மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிஷ்ணுபூர் – கௌபம் சாலையில் இந்த விபத்து நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளியில் இருந்து ஆய்வு சுற்றுலா மேற்கொண்ட போது விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் என் பிரேன் சிங், “இன்று பழைய கச்சார் சாலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க எஸ்டிஆர்எஃப், மருத்துவக் குழு மற்றும் எம்எல்ஏக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்தில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Deeply saddened to hear about the accident of a bus carrying school children at the Old Cachar Road today. SDRF, Medical team and MLAs have rushed to the site to coordinate the rescue operation.
Praying for the safety of everyone in the bus.@PMOIndia pic.twitter.com/whbIsNCSxO
— N.Biren Singh (@NBirenSingh) December 21, 2022
#Manipur: A bus carrying students of Thambalnu Higher Secondary School Yairipok for a study tour met an accident at Khoupum road in Noney District on Wednesday. ⁰According to initial reports, 20 students are feared to be dead while many are critically injured. pic.twitter.com/EEuoLqhfws
— EastMojo (@EastMojo) December 21, 2022
#Breaking: Manipur: A school bus on a picnic trip met a road mishap at Tubung Nungai Old Cachar Road on December 21.
The students faced severe injuries and many of them succumbed to death. pic.twitter.com/8JGMUYwf0C— India Today NE (@IndiaTodayNE) December 21, 2022