மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில் 9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் மலமலவென கட்டடம் முழுவதும் பரவியதில் தான் 10 பேர் இறந்துள்ளனர். மாலத்தீவின் தலைநகர் மாலேவில் இந்த விபத்து நடந்துள்ளது. மாலத்தீவு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தூதரகம் ட்விட்டரில், மாலத்தீவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்ததவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தீ விபத்து துயரம் அளிக்கிறது, இந்தியர்கள் உள்ளிட்ட உயிரிழப்புகளால் கவலை அடைந்துள்ளோம், மாலத்தீவு நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். தீபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை சேகரித்து வருகிறது என்று பதிவிட்டுள்ளது.
மாலத்தீவில் பல்வேறு துறைகளில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
We are deeply saddened by the tragic fire incident in Malé which has caused loss of lives, including reportedly of Indian nationals.
We are in close contact with the Maldivian authorities.
For any assistance, HCI can be reached on following numbers:
+9607361452 ; +9607790701— India in Maldives (@HCIMaldives) November 10, 2022
Pray for all Indians trapped in Maldives Fire.
9 killed out of 11 trapped there.😥😥🙏🙏#Fire #accident #Maldives pic.twitter.com/eWLcRbRdHR— Anveshka Das (@AnveshkaD) November 10, 2022